×

குற்றாலம் விக்டரி லயன்ஸ் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நெல்லை, மார்ச் 15:  குற்றாலம் விக்டரி லயன்ஸ் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் லயன்ஸ் மாவட்ட ஆளுநர் பிரகாஷ் வருகை நிகழ்ச்சி, இலஞ்சியில் நடந்தது. சங்க தலைவர் தெய்வநாயகம் தலைமை வகித்து வரவேற்றார். பட்டயத் தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். நாகராஜன் கொடி வணக்கமும், ஆடிட்டர் நாராயணன் அரிமா வழிபாடும் வாசித்தனர். சங்கத்தின் சேவைகள் குறித்து செயலாளர் கனகராஜ்குமார், நிதி நிலை குறித்து பொருளாளர் வெங்கடேஸ்வரன் பேசினர். சண்முகசுந்தரம், மாவட்ட ஆளுநரை அறிமுகப்படுத்தினார். மாவட்ட ஆளுநர் பிரகாசின் சேவைகளை பாராட்டி பத்திரம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அடையக்கருங்குளம் அன்னை ஜோதி ஆசிரமத்திற்கு 225 கிேலா அரிசி மற்றும் புத்தாடைகள், கல்வி உதவித்தொகையாக தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மாணவிக்கு ரூ.23,500, முதியோர் இருவருக்கு ரூ.30 ஆயிரம், இலங்கை அகதிகள் முகாம் நூலகத்திற்கு ரூ.3 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள், மாற்றுத்திறனாளிக்கு ரூ.6 ஆயிரத்திற்கான உபகரணங்கள், பார்வையற்றோர் நலச்சங்கத்திற்கு கணினி மானிட்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

லயன்ஸ் மாவட்ட இணை செயலாளர் பல்ராம்ராஜா, வட்டார தலைவர் அய்யாத்துரை, மாவட்ட தலைவர் மூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மூத்த உறுப்பினர் பாலாசிங், ஆறுமுகசாமி, முன்னாள் தலைவர்கள் கணேசமூர்த்தி, ஜாகீர்உசேன், தேவராஜ், முத்தையா, மாரியப்பன், மணிகண்டன், ராஜாக்கண்ணு, பாலகிருஷ்ணன், ராஜ்குமார், கடையநல்லூர் கோல்டன் பிரீஸ் லயன்ஸ் சங்க பட்டயத் தலைவர் தங்கம் மற்றும் சங்கரன்கோவில், பரமக்குடி, நெல்லை, சேரன்மகாதேவி டவுன் உள்ளிட்ட லயன்ஸ் சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாக்குழு தலைவர் நல்லமுத்து நன்றி கூறினார்.

Tags : Courtallam ,Victory Lions Association ,
× RELATED 8 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல்...