×

5 கார்கள், 2 டூவீலர் பறிமுதல் குடிநீர் கேட்டு ஆண்டிபட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை

ஆண்டிபட்டி, மார்ச் 15: குடிநீர் வழங்கக் கோரி ஆண்டிபட்டிஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காமாட்சிபுரம் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆண்டிபட்டி அருகே உள்ள மொட்டனூத்து ஊராட்சிக்குட்பட்டது காமாட்சிபுரம். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு வேலப்பர் கோயில் பகுதியில் போர்வெல்கள் அமைத்து குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் போல்வெல்கள் பழுதடைந்ததால், கடந்த 6 மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் காமாட்சிபுரத்தில் உள்ள போர்வெல்களும் இயங்கவில்லை. இதனால் இப்பகுதிமக்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கிராமமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி பெண்கள், ஆண்டிபட்டியில் உள்ள ஊராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஆண்டாள் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனையடுத்து நீண்ட நேரத்திற்கு பின் பேச்சுவார்த்தை உடன் படவே பெண்கள் கலைந்து சென்றனர்.இதுகுறித்து ஆண்டாள் கூறுகையில், `` வேலப்பர்கோயில் பகுதியிலிருந்து குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள பைப்புகளில் சிலர் விவசாயி நிலங்களுக்கு தண்ணீர் திருடி வருவதாகவும், ஊரில் உள்ளவர்கள் மின் மோட்டார்கள் அதிக அளவு பயன்படுத்துவதால் குடிநீர் தட்டுபாடு நிலவுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, உரிய நடவடிக்கை எடுத்து போதியளவு குடிநீர் வழங்கப்படும்’’ என்று கூறினார்.


Tags : office blockade ,Andipati ,
× RELATED ஆண்டிபட்டி அருகே சுடுகாடு இடத்தில்...