×

தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய கார் திருடர்கள் இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை

உத்தமபாளையம், மார்ச் 15: தமிழகம் முழுவதும் பல இடங்களில் கார்களை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கும்பலைச் சேர்ந்த இருவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு  தனியார் நிறுவனத்தில் 2 கார்கள் திருடுபோயின. கேட்டின் முன்பக்க கதவை உடைத்து கார்களை திருடிய கும்பல், கண்காணிப்பு கேமராக்களையும் அடித்து நொறுக்கியது தெரிய வந்தது.கார் திருட்டை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கும்போது இதன் நெட்ஒர்க் பற்றி பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட பல ஊர்களில் கார்கள் திருடுபோனது தெரியவந்தது. இதனை அடுத்து விசாரணையை முடுக்கிய போலீசார் தமிழகம் முழுவதும் திருடுபோன கார்களின் பட்டியலை தயாரித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கார்களை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கும்பல்கள் பற்றி அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. இதனை அடுத்து மதுரை, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் நடத்திய விசாரணையில் அனுமந்தன்பட்டியில் திருடுபோன கார்களுக்கும், இங்குள்ள ஒரு திருட்டு கும்பல்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய போலீசார் இதுவரை திருடுபோன 5 கார்களையும், இரண்டு டூவீலர்களையு பறிமுதல் செய்துள்ளனர். இதன் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் உத்தமபாளையம் டி.எஸ்.பி. வீரபாண்டி தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்,`` இக்கும்பலை சேர்ந்த இருவரை பிடித்து விசாரித்து வருகிறோம். விசாரணையில் இதன் பின்னணியில் இருப்பவர்கள் பற்றி விபரம் தெரிய வரும்’’ என்றனர்.

Tags : two ,thieves ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற...