×

போடியில் பரபரப்பு கம்பம் பள்ளத்தாக்கில் `பொன்னாய்’ மின்னும் நெற்கதிர்கள்

சின்னமனூர், மார்ச் 15: கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெற்கதிர்கள் விளைந்து பொன்னாய் மின்னுகிறது.கம்பம் பள்ளத்தாக்கு லோயர்கேம்ப் துவங்கி வெட்டுகாடு, கூடலூர், கேஜிபட்டி, என்.டி.பட்டி, சுருளிப்பட்டி, கம்பம், கம்பம் மெட்டு சாலை, க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், புதூர், ஆனைமலையான்பட்டி, ராயப்பன்பட்டி, துர்கையம்மன்கோயில், வேம்படிகளம், சின்னமனூர், கே.கே.குளம் பரவு, முத்துலாபுரம் பரவு, பெருமாள்கோயில்பரவு, சீலையம்பட்டி, கோட்டூர், மார்க்கையன்கோட்டை, குச்சனூர், துரைச்சாமிபுரம், கூழையனூர், பாலார்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி, உப்புகோட்டை, உப்பார்பட்டி விலக்கு, வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி வரையில் நீண்டு நெடிய பள்ளத்தாக்காக தேனியிலிருந்து குமுளி மலை அடிவாரம் வரை நெல் விவசாயம் நடைபெற்று வருகி
றது.நடப்பாண்டில் இரண்டாம் போக நெல், கதிர்முற்றி தலைசாய்ந்து பொன்னிறமாக மின்னுகிறது. இன்னும் சில வாரங்களில் அறுவடை நிறைவடையும் நிலை உள்ளது. கதிர் பொன் நிறமாய் மின்னுவதை திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தில் செல்பவர்கள், நின்று செல்பி எடுத்துச் செல்கின்றனர்.

உரிய ஆவணமின்றி பணம் கொண்டு போனால்..பறக்கும்படை குழுவினர் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வரும் புகார்களுக்கு உடனடியாக சென்று சோதனையிட்டு, பணமோ, பொருளோ பறிமுதல் செய்யும்போது, பறிமுதல் செய்தவற்றை கருவூலத்தில் ஒப்படைத்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். நிலைக்கண்காணிப்புக் குழுவினர் தொகுதிக்குள் வரும் வாகனங்களை ஒளிப்பதிவுடன் சோதனை செய்திட வேண்டும். சோதனையின்போது, வாகனங்களில் ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் ரொக்கமாகவோ, ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் பொருள்களாகவோ கொண்டு சென்றால் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தகவல் தெரிவித்து வழக்குப்பதிவு செய்து, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும். வீடியோ கண்காணிப்பு குழுவினர் அனுமதி பெற்று அரசியல் கட்சியினர் அல்லது வேட்பாளர்கள் நடத்தும் பிரசாரம் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை முறையாக எதனையும் விட்டு விடாமல் ஒளிப்பதிவு செய்திட வேண்டும். அனுமதி பெற்றதைவிட பிரசாரத்தின்போது கூடுதலாக பயன்படுத்தும் வாகனங்கள், பொருள்கள் போன்றவற்றின் செலவினை கணக்கிட முடியும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED களைகட்டிய தற்காலிக பூத்கள்