×

பிரேக் பிடிக்காத மினிபஸ் வீட்டில் மோதியது

போடி, மார்ச் 15:  போடியில் மினிபஸ் பிரேக் பிடிக்காமல் வீட்டின் சுவற்றில் மோதி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போடியிலிருந்து  மேலசொக்கநாதபுரம், சில்லமரத்துப்பட்டி, சுந்தராஜபுரம், போ.அம்மாபட்டி வழியாக உப்புகோட்டை வரை மினி பஸ் சென்று வருகிறது. நேற்று மாலை உப்புகோட்டை சென்ற மினிபஸ், மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு போடிக்கு திரும்பி கொண்டிருந்தது. போ.அம்மாபட்டிக்குள் நுழைந்த போது பயணிகளை இறங்குவதற்காக கண்டக்டர் விசில் அடித்தார். வேகமாக சென்ற மினி பஸ்சின் பிரேக் பிடிக்காததால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் சாலை வளைவில் இருந்த வீட்டில் மோதி நிறுத்தினார். இதில் வீட்டின் சுவர் மோதி நின்றது. இதனால் வீட்டிற்குள் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியில் ஓட்டம் பிடித்தனர். உயிரை கையில் பிடித்துகொண்டு சீட்டில் அமர்ந்திருந்த பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர். பஸ் மோதியது சுதந்திர போராட்ட தியாகி ரெகுபதிகோதண்ட விஜயராமன் (80)என்று தெரிய வந்தது. இந்த சம்பவம் போடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : home ,
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...