×

பெண் வாக்காளர்கள் பெரியகுளத்தில் அதிகம்

பெரியகுளம், மார்ச் 15:  பெரியகுளம் (தனி) சட்டசபை தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 3,984 பேர் அதிகம் உள்ளனர். பெரியகுளம் சட்டசபை தொகுதி 2011ல் பொது தொகுதியில் இருந்து மறுசீரமைப்பில் தனி தொகுதியாக மாறியது. அப்போது தேனி சட்டசபை தொகுதி நீக்கப்பட்டது. பெரியகுளம் தொகுதி பெரியகுளம் நகராட்சி, பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 17 ஊராட்சிகளும், தாமரைக்குளம், தென்கரை, வடுகபட்டி, தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி உட்பட 5 பேரூராட்சிகளும் தேனி நகராட்சி, தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊஞ்சாம்பட்டி ஊராட்சி அடங்கியுள்ளது. பெரியகுளம் ஒன்றியம் ஜி.கல்லுப்பட்டி முதல் தேனி நகராட்சி வரை 28கி.மீ தூரம் கொண்டது. இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,30,354, பெண் வாக்காளர்கள் 1,34,338 திருநங்கைகள் 95 என மொத்தம் 2 லட்சத்து 64 ஆயிரத்து 787 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 3,984 பேர் அதிகம் உள்ளனர். 296 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.


Tags : voters ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...