×

மூக்குத்தி, நகை, பாத்திரங்களை பொதுமக்களுக்கு வழங்க கூடாது

பண்ருட்டி, மார்ச் 15: பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் நன்னடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வணிகர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள், ஜவுளிகடை உரிமையாளர்கள் பங்கேற்றனர். தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் பண்ருட்டி ராஜ, நெய்வேலி மங்களநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். உதவி தேர்தல் அலுவலர் கீதா தலைமையிடத்து வட்டாட்சியர் தனபதி, தேர்தல் துணை வட்டாட்சியர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அடகு கடையில் நகை உரிமையாளர்கள் மட்டுமே நகைகளை மீட்க வேண்டும். பொது இடங்களில், கடைகளில் எந்த பேனரும் வைக்கக்கூடாது. மூக்குத்தி, நகைகள்,

பாத்திரங்கள் ஆகியவை வியாபாரிகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதை தவிர்க்க வேண்டும். துணி கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் பொருட்களின் ரசீதுகளில் விழிப்புணர்வு ஸ்லோகங்கள் இருக்க வேண்டும். வங்கியிலிருந்து பணம் எடுக்கும்போது உரிய ஆவணங்கள் பெறப்பட வேண்டும். எந்தவொரு வியாபார கடைகளில் மொத்தமாக பொருட்கள் வாங்க டோக்கன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அச்சக உரிமையாளர்கள் எந்த நோட்டீஸ் அடித்தாலும் அனுமதி பெறவேண்டும்.  திருமண மண்டப உரிமையாளர்கள் மண்டப நிகழ்ச்சிகள் அவ்வப்போது தெரிவித்தல் வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன. பறக்கும்படையினர் வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தவுடன் சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதில், மாவட்ட வர்த்தக சங்க தலைவர் சண்முகம், செயலர் வீரப்பன், வணிகர் சங்க பேரவை மாவட்ட செயலர் ராஜேந்திரன், நகர தலைவர் மோகன், மண்ட உரிமையாளர் நிர்வாகி சந்திரசேகர், நகை கடை அருள், ஸ்வீட் ஸ்டால் சங்க நிர்வாகி ஆறுமுகம் உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டனர்.

Tags : public ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...