×

பெண்கள் பாதுகாப்புக்கு கையெழுத்து இயக்கம்

கடலூர், மார்ச் 15: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் தமிழகத்தில்  பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திட கோரியும் கடலூரில்  இந்திய மாணவர் சங்கத்தினர்  கையெழுத்து இயக்கத்தை தொடங்கினர். கடலூர் கிளை தலைவர் விக்னேஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுகினாபாரதி, ஜெயந்த் நாகராஜ், கார்த்தி, சுதீன், தர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை குறித்த செய்திகள்  நாட்டுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது பெண் சமூகம் மீதான மிக கொடூரமான  தாக்குதல். எனவே வயது வேறுபாடின்றி அனைத்து பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திடுமாறு வேண்டி மாபெரும் கையெழுத்து இயக்கம் வேணுகோபாலபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு வாரம் தொடர்ந்து இந்த கையெழுத்து இயக்கம் நடைபெறும். கையெழுத்துகளை மனுவுடன் இணைத்து கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ளோம் என்றனர். பள்ளி, கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கையெழுத்திட்டு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Tags :
× RELATED புதுவை முழுவதும் 2வது நாளாக 150...