×

10ம் வகுப்பு தேர்வு 1110 பேர் ஆப்சென்ட்

மதுரை, மார்ச் 15: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆயிரத்து 110 பேர் தேர்வுக்கு வராமல் ஆப்சென்ட் ஆகினர்.தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத்தேர்வு தமிழ் முதல் தாளுடன் நேற்று துவங்கியது. மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை, மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 4 கல்வி மாவட்டங்களை சேர்ந்த 466 பள்ளிகளில் இருந்து மொத்தம் 41 ஆயிரத்து 528 மாணவ, மாணவிகள் தமிழ் முதல் தாள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 40 ஆயிரத்து 418 பேர் தேர்வு எழுதினர். ஆயிரத்து 110 பேர் தேர்வுக்கு வரவில்லை. இத்தேர்வு 135 மையங்களில் நடந்தது. இதுதவிர தனித்தேர்வர்களுக்காக 8 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு முடிந்ததும் 11 தேர்வு மையங்களில் இருந்து 36 வழித்தடங்கள் மூலம் விடைத்தாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. காப்பியடிப்பதை தடுக்க அமைக்கப்பட்ட பறக்கும்படையினர் பள்ளிகளுக்கு சென்று சோதனை நடத்தினர்.ஏற்பாடுகளை கலெக்டர் நடராஜன் உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுபாஷினி மற்றும் டிஇஓக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

பிளஸ் 1ல் 793 பேர் நேற்று நடந்த பிளஸ் 1 தேர்வில் இயற்பியல் ேதர்வுக்கு விண்ணப்பித்த 19 ஆயிரத்து 155 பேரில், 301 பேர் ேதர்வு எழுத வரவில்லை. இதேபோல், பொருளாதாரம் தேர்வுக்கு 15ஆயிரத்து 586 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 417 பேர் தேர்வு எழுத வரவில்லை. கணித ேதர்வுக்கு ஆயிரத்து 587 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 75 பேர் தேர்வுக்கு வரவில்லை. ஆக மொத்தம் 36 ஆயிரத்து 328பேர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 793 பேர் ஆப்சென்டஆகி இருந்தனர்.


Tags : 10th Class Selection ,
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...