×

தேர்தல் பறக்கும்படை ரூ.2.97 லட்சம் பறிமுதல்

செம்பட்டி, மார்ச் 15: செம்பட்டி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.2.97 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்து வருகின்றனர். ஆத்தூர் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மனோகரன் தலைமையிலான குழுவினர், நேற்று காலை செம்பட்டி அடுத்த சித்தையன்கோட்டை பிரிவு அருகே வாகன சோதனை நடத்தினர்.

அந்த வழியே வந்த ஒரு காரை மடக்கி ஆய்வு செய்தபோது, போதிய ஆவணங்களின்றி, ரூ.2 லட்சத்து 97 ஆயிரம் பணம் இருந்தது. விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்த சிவானந்தம்(40) என்பதும், கைத்தறித்துறையில் அதிகாரியாக பணியாற்றுவதும் தெரிந்தது. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காட்டி திரும்ப பெற்றுச் செல்லுமாறு தெரிவித்தனர்.

Tags :
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்