×

குருவாயூர் எக்ஸ்பிரஸ் தாமதமாக ஓடும்

நாகர்கோவில், மார்ச் 15: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் ேகாட்ட செய்திகுறிப்பு: எர்ணாகுளம் - கோட்டயம் - காயங்குளம் பிரிவில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இவ்வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ரயில் எண்: 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் எர்ணாகுளம் வடக்கு ரயில் நிலையத்தில் நிறுத்திவிடப்படும். மார்ச் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை இது அமலில் இருக்கும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் இந்த நாட்களில்  தாமதமாக ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Guruvayur Express ,
× RELATED குருவாயூர் எக்ஸ்பிரஸ் கோட்டயம் வழி இயக்கப்படும்