×

நாடாளுமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் விற்பனை குறித்து தினந்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும் தேர்தல் ஆணையம் உத்தரவு

வேலூர், மார்ச் 15: நாடாளுமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் சரக்கு விற்பனை குறித்து தினந்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி தேதி நடக்கிறது. இதையொட்டி நடத்தை விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கடுமையாக கண்காணித்து வருகிறது. தொண்டர்களை குஷிப்படுத்துவதற்கு கட்சியினர் மதுவகைகளை வாங்கிக் கொடுப்பது வாடிக்கையாக உள்ளது. இதற்கான பணத்ைத அந்தந்த கட்சிகள் சார்பில் போட்டியிடும் ேவட்பாளர்களே கொடுத்து வருகின்றனர். குறிப்பாக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க முக்கிய தலைவர்கள் வந்தால் தொண்டர்களுக்கு கிடா விருந்து, மது விருந்து நிகழ்ச்சிகள் நடத்தபடுத்தப்படுகிறது. இதற்காக டாஸ்மாக் கடைகளில் அரசியல் கட்சியனர் குவிந்துவிடுகின்றனர். இதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதாவது தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் தினந்தோறும் விற்பனையாகும் டாஸ்மாக் விற்பனை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். ஒவ்வொரு கடையில் இதற்கு முன்பு எவ்வளவு சரக்கு விற்பனையானது? தற்போது எவ்வளவு விற்பனையாகிறது? என்பது குறித்து தினந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய ஒவ்வொரு மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் நிலவரம் குறித்து காலையில் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், ஒருவர் தனது தேவைக்கு மேல் அதிகமான மது பாட்டில்களை வாங்கிச் செல்வது தெரியவந்தால், அதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும். இதேபோல் அதிக மது பாட்டில் வாங்கிச் செல்பவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர்கள் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு கொண்டு சென்றால் அவற்றை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Election Commission ,elections ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...