கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் ெபண் தீக்குளிக்க முயற்சி

திருப்பூர், மார்ச் 14:  திருப்பூரில் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போலீஸ் நிலைய வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  திருப்பூர் கள்ளம்பாளையம் ரோடு, இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கிரிஜா (55). இவர் நேற்று திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு வந்தார். அப்போது கிரிஜா திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி, விசாரணை நடத்தினர்.

  இதுகுறித்து கிரிஜா போலீசாரிடம் கூறியதாவது: எனது கணவர் பெயர் மாரிமுத்து. தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். தனியாக வசித்து வரும் நிலையில், கணவரும், இரு மகள்களும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இத்தகைய சூழலில் நேற்று அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். நான் அளித்த புகார் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததே இதற்கு காரணம். போலீசார் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். எனது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார். இதையடுத்து புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என கிரிஜாவுக்க போலீசார் அறிவுரை வழங்கி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் போலீஸ் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: