குன்னத்தூரில் தென்னை, பனங்கருப்பட்டி ரூ.5.62 லட்சத்துக்கு ஏலம்

அவிநாசி, மார்ச் 14: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி உற்பத்தியாளர் சம்மேளனம் செயல்பட்டு வருகின்றது. வாரந்தோறும் இங்கு தென்னை மற்றும் பனங்கருப்பட்டிகளை விவசாயிகள் ஏல முறையில் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்வது வழக்கம். இதன்படி நேற்று சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான உற்பத்தியாளர்கள் 4 ஆயிரம் கிலோ தென்னங்கருப்பட்டியையும், ஆயிரம் கிலோ பனங்கருப்பட்டியையும் ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் தென்னங்கருப்பட்டி கிலோ ஒன்றுக்கு ரூ. 110க்கும், பனங்கருப்பட்டி கிலோ ஒன்றுக்கு ரூ. 122க்கும் ஏலம் போனது.  மொத்த ரூ. 5லட்சத்து 62 ஆயிரம் ஏலம் ேபானது என்று கூட்டுறவு விற்பனை சம்மேளன மேலாண்மை இயக்குனர் சீரங்கன் மற்றும் மேலாளர் முருகானந்தம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: