×

பிளஸ் 1 பொதுத்தேர்வு 147 பேர் ஆப்சென்ட்

ஊட்டி, மார்ச் 14: நீலகிரி மாவட்டத்தில் உள்ள 38 தேர்வு மையங்களில் பிளஸ் 1 பொதுத்தேர்வு நடக்கிறது. புதிய பாடத்திட்டத்தின் கீழ் நேற்று கணித தேர்வு நடந்தது. இதில் 1,970 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினர். 25 பேர் எழுதவில்லை. விலங்கியல் தேர்வை 1,222 மாணவ,மாணவிகள் எழுதினர். 30 பேர் எழுதவில்லை. வணிகவியல் பாடத்தில் 3,477 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினார்கள். 78 பேர் எழுதவில்லை.விவசாயம் பாடத்தில் 236 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினர். 14 பேர் எழுதவில்லை.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சலுகையை 31 மாணவர்கள் பெற்றனர். அரசு தேர்வுத்துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம், சொல்வதை எழுதுபவர், ெமாழிப்பாட விலக்கு போன்ற சலுகைகளைப் பெற்று தேர்வு எழுதியுள்ளனர். இதன்படி, மொத்தம் 6,905 பேர் தேர்வு எழுதினார்கள். 147 பேர் எழுதவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசாரூதின் தெரிவித்தார்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...