பணம் கேட்டு மிரட்டுவதாக பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் மீது கலெக்டரிடம் புகார்

கோவை, மார்ச்.14: கேரளா கொழிஞ்சாம்பாறை கரிமண்ணு பகுதியை சேர்ந்தவர் பிரவீன் ஆண்டனி(29). சரக்கு வேன் சொந்தமாக வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.  அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘பொலைரோ பிக் அப்’ என்ற சரக்கு வேனை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வாடகை தொழிலுக்காக வாங்கினேன். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 29ம் தேதி பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் எம்.செல்வராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், என்னையும், எனது உறவினர் தங்கராஜையும், ஜனவரி 6ம் தேதி காவல் நிலையத்திற்கு வருமாறு போலீசார் அழைத்தனர். தங்கராஜும், நானும் அங்கு சென்ற போது இன்ஸ்பெக்டர் நடேசன் என்னை கன்னத்தில் மாறி, மாறி அறைந்தார். பின்னர் சரக்கு வேனை அபகரித்து கொண்டு பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் வைத்துள்ளனர்.

 இது குறித்து கேட்டபோது, செல்வராஜூக்கு ரூ.12 லட்சத்தை கொடுத்துவிட்டு வண்டியை எடுத்து செல் என்று இன்ஸ்பெக்டர் நடேசன் கூறுகிறார். செல்வராஜ் எனக்கு தொழில் நிமித்தமாக தெரிந்தவர்தான். ஆனால் அவரிடம் எந்த கொடுக்கல், வாங்கலும் இல்லை. இந்த செயல் சட்டத்திற்கு முரணானது. செல்வராஜ் சட்டமன்ற துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர் ஆவார். துணைசபாநாயகர் சொன்னதின் பேரிலேயே அவர்கள் வண்டியை பிடுங்கி வைத்து கொண்டு, பணம் கேட்டு மிரட்டுகின்றனர். எனவே இன்ஸ்பெக்டர் நடேசன் மீதும், பொள்ளாச்சி ஜெயராமன் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து எனது வண்டியை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.உணவுத்துறை அதிகாரிகள் சோதனை

Related Stories: