சூதாடிய 7 பேர் கைது

பெ.நா.பாளையம், மார்ச் 14:கோவை தடாகம் அடுத்துள்ள சோமையனூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் தடாகம் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஓலை சாலையில் சூதாட்டம் நடப்பது தெரியவந்தது. அங்கு சென்ற சப் - இன்ஸ்பெக்டர் சின்னராஜ் தலைமையிலான போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட விஜயகுமார் (28) சதீஷ்குமார் (30) கிருஷ்ணசாமி (42) ஆனந்தகுமார்(28), குமார் (32) நந்தகோபால் (28) மகேந்திரன் (26)ஆகிய ஏழு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 58,300 கைப்பற்றப்பட்டது. இது குறித்து தடாகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: