வாழப்பாடி அருகே பெரியாண்டிச்சி அம்மன் கோயில் திருவிழா

வாழப்பாடி, மார்ச் 14: வாழப்பாடி அருகே உள்ள கோட்டவாடியில் பெரியாண்டிச்சி அம்மன் கோயில், கோட்டவாடி, பேளூர், கரடிப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு பொதுவான கோயில் ஆகும். இங்கு மாசித்திருவிழா நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக சென்று சக்தி அழைத்து வந்தனர். பின்னர், ஊர் நடுவே பேய் பிடித்ததாக கூறப்பட்ட 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு  பேய் ஓட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்களை சாட்டையால் அடித்து பேயை ஓட்டினர். தொடர்ந்து சுவாமி ஊர்வலமாக மயானத்திற்கு சென்று, அங்குள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயில் முன்பு பலியிடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 20க்கும் மேற்பட்ட ஆண்கள் ஆடு, கோழிகளை வாயில் கடித்து ரத்தம் குடித்து பூஜை செய்தனர். பின்னர் ரத்தம் கலந்த சோறு வீசப்பட்டது. அதை பெண்கள் வாங்கி  சாப்பிட்டனர். இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: