கொள்முதல் விலை குறைந்தும் பழைய விலைக்கே முட்டை விற்பனை

சேலம், மார்ச் 14:நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. தற்போது கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால், அனைத்து மண்டலங்களிலும் முட்டை விற்பனை குறைந்து வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் பிப்ரவரி மாத இறுதியில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 465 காசுகளாக இருந்தது. நேற்று முன்தினம், முட்டை பண்ணை கொள்முதல் விலை 385 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், சேலம் மாநகர் பகுதியில் உள்ள கடைகளில், முட்டை பழைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு முட்டை ₹5ல் இருந்து, 530 காசுகள் வரை  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களில் 90 காசுகள் குறைந்த போதிலும், முட்டை விலை தொடர்ந்து பழைய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலையேற்றம் என்றால் உடனடியாக அதை அமல்படுத்தும் வியாபாரிகள், விலை குறைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பழைய விலைக்கே விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.

Related Stories: