பாப்பாரப்பட்டியில் பயனின்றி வீணாகும் குப்பை தொட்டிகள்

ஆட்டையாம்பட்டி, மார்ச் 14: வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், சாலையில் தேங்கும் குப்பைகளை தடுக்க அப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ஒன்றிய நிர்வாகம் சார்பில் 17 குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டது. ஆனால், பாப்பாரப்பட்டி பகுதி மக்கள் இதனை உபயோகப்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளனர். மேலும், சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டி செல்வதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலையில் தேங்கும் குப்பை, சாக்கடையில் விழுந்து அடைப்பு ஏற்படுவதால், கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதோடு, கொசுகள் உற்பத்தியும் அதிகரித்து தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதனை தடுக்க,  கிடப்பில் போடப்பட்டுள்ள குப்பை தொட்டிகளை ெபாதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: