ஆலிம் முஹமது சாலேக் கல்லூரி 348 மாணவர்களுக்கு பட்டம்

திருவள்ளூர், பிப். 26: ஆவடி ஆலிம் முஹமது சாலேக் இன்ஜினியரிங் கல்லூரியின் 15ம் ஆண்டு பட்டமளிப்பு விழா,  கல்லூரி தலைவர் ஹபீபுன்னிசா சாஹிபா தலைமையில் நடைபெற்றது. செயலாளர் மற்றும் தாளாளர் எஸ்.சேகு ஜமாலுதீன், முதல்வர் அப்சல் அலி பெய்க், மேலாளர் ஷேக் பரீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில்  சென்னை பெருநகர தலைமையிடத்து காவல்துறை துணை ஆணையர்  எஸ். சரவணன், பல்கலைக் கழக அளவில் ரேங்க் எடுத்த 9 மாணவர்கள் உள்பட  306 மாணவர்களுக்கு பொறியியல் பட்டங்களும், 42 மாணவர்களுக்கு  எம்.சி.ஏ பட்டங்களும் வழங்கி பேசினார்.

கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் எஸ். சேகு ஜமாலுதீன்   பேசும்போது, “பல்கலைக்கழக தரவரிசையில் நமது கல்லூரியை சேர்ந்த 9 மாணவர்கள் இடம்பெற்றிருப்பது பெருமைக்குரிய நிகழ்வாக திகழ்கிறது. இக்கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் தங்கள் வாழ்க்கையில் சிறப்படைந்து  சமுதாயத்திற்கு சிறந்த முறையில் பங்களிக்க வேண்டும் என்வாழ்த்துகிறேன்.” என்றார்.

Related Stories: