புத்தன்தருவையில் மருத்துவ முகாம்

சாத்தான்குளம், பிப். 22:  சாத்தான்குளம் அருகே  புத்தன்தருவை ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சுகாதார திருவிழாவும்,  சிறப்பு மருத்துவ முகாமும் நடந்தது. ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி எம்பி தலைமை வகித்து முகாமை துவக்கிவைத்தார். முன்னிலை வகித்த சண்முகநாதன் எம்எல்ஏ,  பெண்களுக்கு அம்மா பெட்டகம், குழந்தைகளுக்கான பிறப்பு சான்று, 6 தொற்றா நோய் தடுப்பு செவிலியர்களுக்கு டேப் பேடு வழங்கிப் பேசினார். வட்டார மருத்துவ அலுவலர் சண்முகப்பிரியா வரவேற்றார். மாவட்ட சுகாதார பணிகளுக்கான துணை இயக்குநர் கீதாராணி  பேசினார். கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தது. முகாமில் பங்கேற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

 ஒன்றிய அதிமுக செயலாளர்கள் சாத்தான்குளம் அச்சம்பாடு சவுந்திரபாண்டி, ஆழ்வார்திருநகரி ராஜ்நாராயணன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருப்பாற்கடல், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்கள் சாத்தான்குளம் பொன்முருகேசன், சொக்கன்குடியிருப்பு பாண்டியராஜன், புத்தன்தருவை முத்துராமலிங்கம், ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவபாண்டியன், ஜெ. பேரவை ஒன்றியத் தலைவர் சின்னத்துரை, எம்ஜிஆர் இளைஞர் அணி ஒன்றியச் செயலாளர் பாலகிருஷ்ணன், கிளைச் செயலாளர் திருமணவேல், ஊராட்சி  செயலாளர்கள் சங்கரலிங்கம், ராஜேந்திரன், அப்பாத்துரை, தட்டார்மடம் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோரிஸ் செல்வதுரை நன்றி கூறினார்.

Related Stories: