பிப். 25ல் ஊராட்சி சபை கூட்டம் தூத்துக்குடி வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு

தூத்துக்குடி, பிப். 22: தூத்துக்குடி வடக்கு மாவட்டம் வேம்பார் தெற்கு ஊராட்சியில் வரும் 25ம் தேதி நடைபெறும் ஊராட்சி சபை கூட்டம், பாக முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வருகைதரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுவதாக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய, மாநில அரசுகளின் திறமையற்ற நிர்வாகத்தால் தமிழகத்தில் மக்கள் படும் துயரங்களை நேரில் காணவும், அவர்களது குறைகளை கேட்டறியவும் மாநிலம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் ஊராட்சி தோறும் கிராமசபை கூட்டங்களை திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

அதன்படி வரும் 25ம் தேதி மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டம், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம்.
Advertising
Advertising

வேம்பார் தெற்கு ஊராட்சியில் நடைபெறும் ஊராட்சிசபை கூட்டத்தில் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்கிறார். மாலை 5.30 மணிக்கு விளாத்திகுளம்- மதுரை சாலையில் நடைபெறும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கான பாக முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைதரும் கழக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வரும் 25ம் தேதி காலை 7 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. எனவே, தலைவரை வரவேற்க கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர், கூட்டுறவு பிரதிநிதிகள், உள்ளாட்சி முன்னாள் பிரதிநிதிகள், முன்னோடிகள், தொண்டர்கள், செயல்வீரர்கள் என அனைவரும் அணி திரண்டுவர வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: