ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் இன்று துவக்கம் தூத்துக்குடியில் மின்னொளி கபடி போட்டி

தூத்துக்குடி, பிப். 22: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் மாவட்ட அதிமுக சார்பில் மின்னொளி கபடி போட்டி இன்று (22ம் தேதி) துவங்குவதாக மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழா குறித்து தூத்துக்குடியில் மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். நெல்லை- தூத்துக்குடி ஆவின் சேர்மன் சின்னதுரை முன்னிலை வகித்தார். மேற்கு பகுதி செயலாளர் முருகன் வரவேற்றார். இதில் நெல்லை- தூத்துக்குடி மீனவ இணைய தலைவரான கிழக்கு பகுதி செயலாளர் சேவியர், மாவட்ட துணைச் செயலாளர்கள் தங்க மாரியம்மாள், மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பி.டி.ஆர் ராஜகோபால், மருத்துவ அணி மாவட்டச் செயலாளர், ராஜசேகரன், இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் நடராஜன், வக்கீல் பிரிவு மாவட்டச் செயலாளர் யுஎஸ் சேகர், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் டாக் ராஜா, மகளிர் அணி மாவட்டச் செயலாளர் குருத்தாய் என்ற விண்ணரசி, பொதுக்குழு உறுப்பினர்கள் அய்யாத்துரை பாண்டியன், மாரியப்பன், ஜான்ஸி, வக்கீல்  பிரிபு ஆண்ட்ரூமணி, ராஜாராம், தூத்துக்குடி ஒன்றியச் செயலாளர் சண்முகவேல்,  இளைஞர் பாசறை மாவட்டத் தலைவர் ராஜாசிங், நகர்மன்ற முன்னாள் தலைவர் மனோஜ்குமார், ஜெ. பேரவை மாவட்ட இணைச் செயலாளர் ஜெபசிங், துணைச் செயலாளர் ஜீவா பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

பின்னர் மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் கூறுகையில், ‘‘தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 5071 பேருக்கு தையல் மிஷின், சைக்கிள், சேலை, ஊனமுற்றோர்ருக்கான மிதிவண்டி உட்பட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும், மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவில் மின்னொளி கபடிப் போட்டி தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் இன்று (22ம் தேதி) துவங்கி வரும் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக ஒன்றிய வாரியாக அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுமார் 300 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கிவைக்கிறார். இதில் ஆண்கள் பிரிவுக்கு முதல் பரிசு ரூ.50,071, 2ம் பரிசு ரூ.40,071, 3ம் பரிசு ரூ.25,071, 4ம் பரிசு ரூ.25,071 மற்றும் சிறந்த வீரர்கான பரிசு யமஹா பைக் பெண்களுக்கான பிரிவுக்கு முதல் பரிசு ரூ.30071, 2ம் பரிசு ரூ.20071 3ம் பரிசு ரூ.10071, 4ம் பரிசு ரூ.10,071 மற்றும் சிறந்த வீராங்கனைக்கான பரிசு தங்க நாணயம் மற்றும் ஜெயலலிதா நினைவு பரிசு கோப்பைகள் வழங்கப்படும். இன்று (21ம் தேதி) மதியம் 2 மணியளவில் குரூஸ்பர்னாந்து சிலை முன்பிருந்து அனைத்து அணி வீரர்களும் ஊர்வலமாக எஸ்.ஏ.வி.பள்ளி மைதானம் வருகின்றனர்’’ என்றார்.

Related Stories: