தூத்துக்குடியில் பிப். 24ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் கனிமொழி எம்பி துவக்கிவைக்கிறார்

தூத்துக்குடி, பிப். 22:  தூத்துக்குடியில் வரும் 24ம் தேதி நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்பி துவக்கிவைக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற திமுக நாடாளுமன்ற குழு தலைவரான கனிமொழி எம்பியிடம் கோரிக்கை வைத்த இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி கிடைக்கவில்லை என்றனர். இதையடுத்து கனிமொழி எம்பி ஏற்பாட்டின் பேரில் தாளமுத்துநகரில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றனர். இதன் தொடர்ச்சியாக அவரது ஏற்பாட்டின் பேரில் கருணை அறக்கட்டளை சார்பில் சுமார் 6 ஆயிரம் பேர் பங்கேற்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் மகளிர் கலைக் கல்லூரியில் நாளை மறுதினம் (24ம் தேதி) காலை 9 மணிக்கு நடக்கிறது.

100க்கும் மேற்பட்ட இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் பங்குபெறும் இம்முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி.,  பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., மற்றும் பட்டதாரி கல்லூரி படித்த அனைவரும் பங்கேற்கலாம். முகாமை துவக்கிவைக்கும் கனிமொழி எம்பி, இதில் தேர்வாகும் இளைஞர்களுக்கான பணி நியமன ஆணையை வழங்குகிறார். எனவே, இந்த அரிய வேலை வாய்ப்பு முகாமை தகுதியானோர் பயன்படுத்திக்கொள்ளுமாறு கருணை அறக்கட்டளையினர் கேட்டுக்

கொண்டுள்ளனர்.

Related Stories: