கல்லிடைக்குறிச்சியில் ரூ.1.7 கோடியில் திட்டப்பணிகள்

அம்பை, பிப். 22:  கல்லிடைக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை முருகையாபாண்டியன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் முத்துக்குமார் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் நபார்டு திட்டம் 2018-19ன் கீழ்  கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோயில் சன்னதி தெரு முதல் சந்தனமாரி அம்மன் கோயில் தெரு வரை ரூ.70 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி, ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டம் 2018-19ன் கீழ் ரூ.56 லட்சத்தில் ஆதிவராக பெருமாள் கோயில் ரத வீதியில் தார் சாலை அமைத்தல் மற்றும் தளச்சேரி உறைக்கிணறு முதல் குமாரகோயில் நீர்த்தேக்க தொட்டி வரை ரூ.44 லட்சத்தில் குடிநீர் விஸ்தரிப்பு பிரதான பைப் லைன் பதிப்பு போன்ற பணிகளை  முருகையாபாண்டியன் எம்எல்ஏ தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் ரமேஷ், ஓவர் சீயர் சேதுராமலிங்கம், மாவட்ட துணை செயலர் செவல் முத்துசாமி, மாநில பேச்சாளர் மீனாட்சி, கான்ட்ராக்டர் சங்கரலிங்கம், பேரூராட்சி அலுவலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: