கீழப்பாவூர் ஒன்றியத்தில் 200 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள்

பாவூர்சத்திரம், பிப். 22:  கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் பாவூர்சத்திரம், பூலாங்குளம், பெத்தநாடார்பட்டி, மேலப்பாவூர், வீ.கே.புதூர் மற்றும் ஆவுடையானூரை சேர்ந்த 200 பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் அசில் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா 50 கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்து கோழிக்குஞ்சுகளை வழங்கினார்.

மேலும் பராமரிப்பு தொகையாக கோழிக்குஞ்சுக்கு ரூ.75 வீதம் 3,750, கூண்டு அமைக்க  ரூ.2,500 மற்றும் பயிற்சி கட்டணம் ரூ.150ம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

கால்நடை பராமரிப்புத்துறை தென்காசி உதவி இயக்குநர் முருகையா மற்றும் டாக்டர்கள் சாமுவேல்ராஜ், மகேஸ்வரி, மாறன்வழுதி, ரமேஷ், கிருஷ்ணமணி, செல்வகுத்தாலிங்கம், பாலமுருகன், ரமாதேவி, அசன் காசிம், கால்நடை ஆய்வாளர்கள் காதிரி, தினேஷ், சுப்பிரமணியன், உதவியாளர்கள் பால்ராஜ், முப்புடாதி பேச்சி, குமாரசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், பாலன்புராஜா, மேலவை பிரதிநிதி கணபதி, அமல்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: