கலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும் ஜல்லி குவியல்

திருப்பூர், பிப்.22: திருப்பூர்  மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றிலும் தார் ரோடு அமைக்க  ஜல்லி கற்கள் கொட்டி பல நாட்கள் ஆகியும் தார் ரோடு பணி நடக்காததால் பொது மக்கள்  நடந்து  செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர்  மாவட்ட கலெக்டர் அலுவலக  வளாகத்தை சுற்றிலும் உள்ள மண் ரோட்டை தார் ரோடு அமைக்கும் பணிக்காக ஜல்லி  கற்கள் கொட்டி பல நாட்கள் ஆனது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரத்தின்  முதல் நாள் திங்கட்கிழமை மக்கள் குறை தீர் கூட்டம் நடக்கிறது. மாதம் ஒரு  முறை விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடக்கிறது.

இதற்காக திருப்பூர் மாநகர்,  பல்லடம், காங்கேயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை  பகுதி மக்கள்  மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க வந்து செல்கின்றனர். விவசாயிகள் வருகின்றனர். அதிகாரிகளின் வாகனங்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும் தார் ரோடு அமைக்க ஜல்லி கற்கள் குவியல்,  குவியலாக  கொட்டி பல  நாட்கள் ஆகியும் இது வரை தார் ரோடு அமைக்க வில்லை. அப்பகுதியில் தார் ரோடு அமைக்க மாவட்ட  கலெக்டர் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: