காவிரியில் ஏஎஸ்பி அதிரடி சோதனை வண்டி, மாடுகளை விட்டுவிட்டு மணல் திருடர்கள் தப்பி ஓட்டம்

திருவெறும்பூர், பிப்.22:  திருவெறும்பூர் அருகே சர்க்கார்பாளையம் காவிரி ஆற்றில் மணல் திருடர்கள் ஏஎஸ்பியை கண்டதும் வண்டி, மாடுகளை போட்டுவிட்டு தப்பியோடினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் காவிரிஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளி வருவதாக திருவெறும்பூர்  ஏஎஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரேவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்றுஅதிகாலை ஏஎஸ்பி தலைமையில் திருவெறும்பூர் போலீசார் சர்க்கார்பாளையம் காவிரிஆற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் சிலர் மாட்டுவண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் மணல் திருடர்கள் 4 மாட்டு வண்டிகளையும், 4 மாடுகளையும் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதையடுத்து மாடுகள் மற்றும் வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து திருவெறும்பூர் காவல் நிலையம் கொண்டு வந்தனர். போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய மணல் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: