சிவகாசியில் வேலை இழந்த பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் திருச்சியில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

திருச்சி, பிப். 22:  சிவகாசியில் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி திருச்சியில் சிஐடியூ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் சிஐடியூ சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். இதில் ராஜேந்திரன், ராமர், செல்வி, வீரமுத்து உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேட்டூரில் கெம்பிளாஸ்ட் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், தொழிற்சங்கம் அமைத்ததை ஏற்க மறுத்த நிர்வாகம் 99 பேரை சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்துள்ளதை கண்டித்தும், சிவகாசி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு 8 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இப்பிரச்னையில் அரசு தலையிட்டு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணமும், பட்டாசு ஆலை நிர்வாகங்கள் சம்பள இழப்பை கருத்தில் கொண்டு தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் சட்டபடியான சம்பளத்தை வழங்க வேண்டும்.

பிஎஸ்என்எல் ஊழியர்களின் நியாயமான கோரிக்கையான 4ஜி சேவை வழங்குவதை உறுதிபடுத்த வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும், கார்ப்பரேட் மயமாக்குவது போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: