மாநகர் பகுதி போலீசார் அலட்சியம் ஆக்கிரமிப்புகளால் அவலம் தினம்தோறும் அவதிப்படும் பொதுமக்கள்

தஞ்சை, பிப். 22: போக்குவரத்து போலீசாரின் அலட்சியத்தால் தஞ்சாவூர் மாநகர் பகுதி தினம்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாநகரில் 51 மாநகராட்சி வார்டுகள் உள்ளன. மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட கீழவீதி, தெற்குவீதி, வடக்குவீதி, மேலவீதி தான் இம்மாநகரின் முக்கிய வீதிகள். அப்போது இருந்த மக்கள்தொகைக்கு போக்குவரத்து நெரிசலே இருந்திருக்காது. ஆனால் இன்று மக்கள்தொகை பெருக்கத்தாலும், வாகனங்கள் பெருகிவிட்டதாலும் தினம்தோறும் போக்குவரத்து நெருக்கடியால் தஞ்சை மாநகரம் விழிபிதுங்கி வருகிறது.  அந்த காலத்தில் இருந்த சாலைகளே இப்போதும் இருக்கிறது. இதில் கடைகளின் ஆக்கிரமிப்பு, சாலையோர கடைகள், பிளாட்பார கடைகள், தள்ளுவண்டி கடைகள் என சாலைகள் மிகவும் குறுகலாகிவிட்டன. இதை மாநகராட்சி நிர்வாகமோ, காவல்துறை நிர்வாகமோ கண்டுகொள்ளாமல் உள்ளன. தஞ்சை தெற்குவீதி, தெற்கலங்கம், மாமாசாகிப் மூலை போன்ற பகுதிகளில் பகல் நேரங்களில்கூட செல்ல முடியாது. ஏராளமான இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அவலம் நீடிக்கிறது. தெற்குவீதியில் போக்குவரத்து நெரிசல் அன்றாட வழக்கமாகிவிட்டது. தெற்கலங்கத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. கீழவீதியில் தற்போது பாதாள சாக்கடை ஆள்குழாய் சரிபார்ப்பு பணிகள் நடப்பதால் ஆங்காங்கே சாலையின் நடுவே தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெரிய கோயில், பழைய பேருந்து நிலையம் என பல இடங்களில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் விளம்பரங்கள் மட்டுமின்றி ஜவுளி கடை, நகைக்கடை விளம்பரங்களால் சாலைகள் ஆக்கிரமிப்புக்குள்ளாகி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தஞ்சை காந்திஜி ரோடு, தெற்கலங்கம், கீழராஜவீதி, தெற்குவீதி உட்பட முக்கிய மாநகர சாலைகளை ஒரு வழிப்பாதையாக அறிவித்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். இதேபோல் மேரீஸ் கார்னர் முதல் ராமநாதன் பேருந்து நிலையம் வரை இருபக்கமும் கார்கள் பார்க்கிங் செய்யப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதேபோல் தஞ்சை நீதிமன்ற சாலை, கீழஅலங்கம் சாலையோரங்களில் மாலை முதல் இரவு வரை ஏராளமான கார்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே இப்பகுதிகளில் இருபுறமும் கார் பார்க்கிங்குக்கு தடை விதிக்க வேண்டும். தெற்கலங்கம், தெற்கு வீதிகளில் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதித்து அச்சாலைகளை ஒருவழி பாதையாக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நகரில் போக்குவரத்தை நெரிசலை குறைக்க முடியுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆனால் இவற்றையெல்லாம் உடனடியாக கண்காணித்து உரிய நடவடிக்கை மூலம் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்ப்பதால் பொதுமக்கள் தினமும் சொல்லெனா துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே போலீசார் களத்தில் இறங்கி போக்குவரத்தை சீர் செய்ய எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு 9 மணி முதல்

ேபாக்குவரத்து நெரிசல்பள்ளியக்ரகாரம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை கடுமையான வாகன நெரிசல் உள்ளது. இதேபோல் நாஞ்சிக்கோட்டை சாலை, மேரீஸ் கார்னர், கீழவாசல், மருத்துவக்கல்லூரி சாலைகள் எப்போதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனை முன் இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டு அங்கிருந்து இயக்கப்படுகிறது. இதனால் இச்சாலையில் இரவு 9 மணி முதல் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. எனவே இப்பேருந்துகள் அவரவர் புக்கிங் அலுவலகத்திலிருந்து புறப்படும் வகையில் முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: