பந்தநல்லூரில் கடத்தப்பட்டதாக கூறிய மாணவி மீட்பு தாயிடம் கோபித்து சென்றது அம்பலம்

கும்பகோணம், பிப். 22: கும்பகோணத்தை சேர்ந்தவர் லதா (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கும்பகோணத்தில் உள்ள அரசு மகளிர் கல்லுாரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 16ம் தேதி காலையில் கல்லூரிக்கு சென்றவர் மாலையில் வீட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் லதாவின் செல்போன் எண்ணிலிருந்து உறவினரின் மகளின் செல்போனுக்கு அன்றிரவு 11 மணியளவில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ரூ.30 லட்சம் கொடுத்தால் லதாவை விட்டு விடுவோம். இல்லையென அவரை கொலை செய்து உடலை வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என்று இருந்தது. இதுகுறித்து பந்தநல்லூர் போலீசில் லதாவின் தாய் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் சென்னையில் லதா இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சென்னைக்கு சென்று லதா போலீசார் மீட்டனர். ேமலும் லதாவுடன் இருந்த திருவள்ளூர் மாவட்டம் காக்கவாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் அஜித்குமார் (23) என்பவரை கைது செய்து பந்தநல்லூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

இதையடுத்து கும்பகோணம் கோர்ட்டில் நேற்று லதாவை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது இன்று மதியம் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், லதாவுக்கும், அவரது தாயாருக்கும் மனவருத்தம் இருந்து வந்தது. இதனால் வெளியூருக்கு கடந்த 16ம் தேதி புறப்பட்டார். அப்போது சென்னை செல்லும்போது வாட்ஸ்ஆப் மூலம் நன்கு அறிமுகமான நண்பரான அஜித்குமாரிடம், தான் வேலைக்காக சென்னை வருகிறேன் என்றார். அதற்கு அவர் வர வேண்டாம் என்று கூறினார்.

ஆனால் லதா, வேலை வாங்கி தரவில்லை என்றால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வேன் என்று லதா மிரட்டியுள்ளார். இதனால் லாட்ஜில் லதாவை அஜித்குமார் தங்க வைத்துள்ளார். இதையடுத்து அங்கு சென்று அழைத்து வந்தோம். மேலும் லதாவே அவரது செல்போன் எண்ணிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

Related Stories: