அடிப்படை வசதிகள் கேட்டு கள்ளிக்குடியில் தர்ணா

திருமங்கலம், பிப்.21: கள்ளிக்குடி யூனியன் வில்லூர் கிராமத்தில் தென்னமநல்லூர் சாலையோரம் விரிவாக்க பகுதிகளில் இதுவரையில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்ய வில்லை. குறிப்பாக குடிநீர் வசதி, தெருவிளக்கு, போர்வெல் உள்ளிட்டவை அமைத்து தரவில்லை. பொது கிணற்றில் குப்பை கூழங்களை போட்டு நிரப்புவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதற்கு உடனடியாக தீர்வு காணும்படி வலியுறத்தி வில்லூர் கிராம விரிவாக்க பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் திரண்டு நேற்று கள்ளிக்குடி யூனியன் அலுவலகம் வந்தனர்.

பின்னர் யூனியன் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்பு அதிகாரிகள் அவர்களிடம் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விரிவாக்க பகுதியில் வசிக்கும் மக்களின் வசதிக்காக ரூ.4 லட்சம் செலவில் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு–்ளளது. கிணற்றிலுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

Related Stories: