சொத்து பிரச்னையில் சகோதரி மகனை கொன்ற ராணுவ வீரருக்கு ஆயுள்

மதுரை, பிப். 22:  சொத்து பிரச்னையில் அக்கா மகனை கொன்ற ராணுவ வீரருக்கு, மதுரை நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சமயநல்லூர் அருகே திருவேங்கடம் தச்சம்பத்து மேலத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). ராணுவ வீரராக பணியாற்றினார். இவரது அக்கா மகன் சுப்பிரமணியன். இவர் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டையில் வசித்து வந்தார். இவர்களுக்கிடையே நீண்ட காலமாக சொத்து பிரச்னை இருந்து வந்தது.

கடந்த 2013ம் ஆண்டு விடுமுறையில் சொந்த ஊருக்கு ஆறுமுகம் வந்தார்.

அப்போது அவருக்கும், சுப்பிரமணியனுக்கும் இடையே மீண்டும் சொத்து சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம், சுப்பிரமணியனை வெட்டி கொன்றார். இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து, ஆறுமுகத்தை கைது செய்தனர். இவ்வழக்கு மதுரை மாவட்ட முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுகத்திற்கு ஆயுள் தண்டனை, ரூ.15 அயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: