இன்று சிறப்பு திட்ட முகாம்

மதுரை, பிப். 22: மதுரை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களிலும் இன்று அம்மா சிறப்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாமில், தாசில்தார், துணை தாசில்தார் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு மனுக்கள் பெறுவார்கள். இந்த முகாம், கள்ளிக்குடி தாலுகாவில், தென்னமநல்லூரிலும், மேலூர் தாலுகாவில் சாத்தமங்கலத்திலும், உசிலம்பட்டி தாலுகாவில் பொருப்பு மேட்டுப்பட்டியிலும், மதுரை கிழக்கு தாலுகாவில் அங்காடி மங்கலத்திலும் நடக்கிறது. இதேபோல், வாடிப்பட்டி தாலுகாவில் நாச்சிகுளத்திலும், திருமங்கலம் தாலுகாவில் அலப்பலச்சேரியிலும். மதுரை வடக்கு தாலுகாவில் ஆனையூரிலும், பேரையூர் தாலுகாவில் அதிகாரிபட்டியிலும், மதுரை தெற்கு தாலுகாவில் அவனியாபுரத்திலும் நடக்கிறது. மேலும், மதுரை மேற்கு தாலுகாவில் கொக்குளப்பிலும், திருப்பரங்குன்றம் தாலுகாவில் தோப்பூரிலும் நடைபெறுகிறது.

Related Stories: