கைலாசநாதர் கோயில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி படாததால் பக்தர்கள் ஏமாற்றம்

தாரமங்கலம், பிப்.22: தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலில் கூட்ட நெரிசலால், லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழாததால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

தாரமங்கலத்தில் பிரதித்தி பெற்ற கைலாசநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள லிங்கத்தின் மீது, பிப்ரவரி 21ம் தேதி முதல் 3நாட்களுக்கு மாலை 6.15மணிக்கு சூரிய ஒளி, கோபுர வாசல் வழியாக வந்து விழும். இதை காண ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று, லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதை காண்பதற்காக, கோயிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது. சூரிய வெளிச்சம் வருவதை கண்ட பக்தர்கள், லிங்கத்தை காணும் ஆவலில், நுழைவு வாயிலில் குவிந்தனர். இதனால் பிரகார நந்தி வரை வந்த சூரிய ஒளி, லிங்கத்தின் மீது விழாமல், பக்தர்களின் தலை மீது மட்டுமே விழுந்தது. இதனால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories: