மருத்துவ முகாம்

ஆட்டையாம்பட்டி, பிப்.22: வீரபாண்டி சுகாதார நிலையம் சார்பில், தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம், அரசு மகளிர் பள்ளியில் நடந்தது. இம்முகாமில், 13 தனியார் மருத்துவமனைகள் சார்பில், இலவச பரிசோதனை செய்யப்பட்டது. சேலம் சுகாதார துறை துணை இயக்குனர் பூங்கொடி தலைமையில், வீரபாண்டி எம்எல்ஏ மனோன்மணி கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்தார். இதில் தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு, வளர் இளம்பெண்களுக்கு தேவையான பரிசோதனைகள் மற்றும் உடல் குறித்த ஆலோசனைகள் வழங்கினர். இதில், 1,843 பேர் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.

Related Stories: