×

போலீஸ் கமிஷனரின் சட்ட ஆலோசகர் மாற்றம்

சேலம், பிப்.22: சேலம் மாநகர போலீஸ் கமிஷனரின் சட்டஆலோசகர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.  சேலம் மாநகர போலீஸ் கமிஷனரின் சட்ட ஆலோசகராக பணியாற்றி வந்தவர் ரஷிதா. இவர் வாழப்பாடி நீதிமன்றத்திற்கு அரசு உதவி வழக்கறிஞராக மாறுதல் செய்யப்பட்டுள்ளார். சேலம் 6வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அரசு உதவி வழக்கறிஞராக பணியாற்றி வந்த நம்புராஜன், விருதுநகர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார். இதேபோல தமிழகம் முழுவதும் 39 அரசு உதவி வழக்கறிஞர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை அரசு குற்றத்தொடர்பு துறை பிறப்பித்துள்ளது.

Tags : Police Commissioner ,Legal Counsel Change ,
× RELATED கஞ்சா விற்ற 40 பேர் கைது