கொடைக்கானல் காட்டேஜில் விபச்சாரம் பெங்களூர் பெண், புரோக்கர்கள் கைது

கொடைக்கானல், பிப். 22: கொடைக்கானலில் வாடகைக்கு காட்டேஜ் எடுத்து விபச்சார தொழிலில் ஈடுபட்ட பெங்களூரை சேர்ந்த பெண், 2 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் தங்குவதற்காக ஏராளமான விடுதிகள், காட்டேஜ்கள் கட்டப்பட்டுள்ளன. சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து ஒரு சில விடுதி, காட்டேஜ்களில் விபச்சார தொழிலும் நடந்து வருகிறது. கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் முனியாண்டி. இவர் நேற்று முன்தினம் இரவு பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது இவரிடம் திண்டுக்கல், அனுமந்தராயன் கோட்டையை சேர்ந்த ஸ்டீபன் (எ) ஸ்டீபன் ஜேசுராஜ் (37), ரெட்டியார்சத்திரம் அம்மாபட்டியை சேர்ந்த மார்ட்டின் வில்லியம் (35) ஆகியோர், ‘‘அப்சர்வேட்டரி பகுதியிலுள்ள காட்டேஜில் பெங்களூரை சேர்ந்த இளம்பெண் உள்ளார். அங்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம்’’ என கூறியுள்ளனர்.

புரோக்கர்களிடம் இருந்து தப்பிய முனியாண்டி, இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் காட்டேஜில் அதிரடி சோதனை நடத்தியபோது, பெங்களூரை சேர்ந்த 20 வயது பெண்ணை வைத்து விபச்சார தொழில் நடத்தியது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் புரோக்கர்கள் ஸ்டீபன் ஜேசுராஜ், மார்ட்டின் வில்லியம் மற்றும் அந்த பெண்ணும் தப்பியோட முயன்றனர். உடனே 3 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: