மாற்றங்கள் எங்கிருந்து வர வேண்டும்?

இவர்களின் துயரத்தையும், பரிதவிப்பையும் ‘பார்த்தாலே’ தெரிந்து கொள்ள கூடிய நிலையிலே உள்ளது. இருப்பினும் அரசு மற்றும் வங்கி அதிகாரிகளின் அலட்சியத்தினால் தேவையற்ற துயரத்திற்கு இக்குடும்பம் தள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான பணி, சேவை செய்ய வாய்ப்பு என்ற எண்ணம் கடந்து அதிகார தோரணைக்குள் செல்லும் போதுதான் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்பட்டு பாமரனை குத்தி கிழிக்கின்றன.

இன்றைக்கு தெரிந்தது ஒன்று.. தெரியாதது பல.. எனவே ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டிய பிறகுதான் திருத்த வேண்டும்... சரிசெய்து கொள்ள வேண்டும்.. என்ற நிலை கடந்து.. தங்கள் அளவிலே மாற்றங்களை உருவாக்கி கொண்டால் அதிகாரிகள்- பொதுமக்கள் உறவு உணர்வுபூர்வமானதாக இருக்கும்.

Related Stories: