×

விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது வழங்கல்

சேலம், பிப்.22: சேலம் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது வழங்கப்பட்டது. இந்திய மற்றும் உலகளாவிய கல்வி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, எதிர்கால தேவைகள் பற்றி அறிய உதவும் எட்டெக் நிறுவனம் சார்பில், பெங்களூருவில் கல்வியியல் சார்ந்த 2 நாள் மாநாடு நடந்தது. இதில், பல்வேறு கல்வியாளர்கள், கல்வி நிறுவன உரிமையாளர்கள், துறை தலைவர்கள் கலந்து கொண்டு, தங்களின் கல்வி தொழில்நுட்பம் சார்ந்த நுண்ணாய்வு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இம்மாநாட்டில், சேலம் விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையை சேர்ந்த டீன் செந்தில்குமார் கலந்து கொண்டு, பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். இந்த மாநாட்டில், விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த்  சயின்ஸ் துறைக்கு, தென்னிந்தியாவின் சிறந்த வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கான விருது வழங்கப்பட்டது. இதனை, டீன் செந்தில்குமார் பெற்றுக் கொண்டார்.

Tags : Vinayaka Mission Ally Health Science Department ,
× RELATED கிளி வளர்த்த 3பேருக்கு ₹15 ஆயிரம் அபராதம்