நீங்களே ‘பென்டிங்’ போட்டு விடுகிறீர்கள்

திண்டுக்கல் மாநகராட்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கமிஷனர் மனோகரன், காவல்துறை டிஎஸ்பி மணிமாறன் மற்றும் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் முதலில் நகர் வடக்கு போலீசில் பிளக்ஸ் வைப்பதற்கான அனுமதி விண்ணப்பங்களை வழங்க வேண்டும். தொடர்ந்து ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று கையெழுத்தான பின்பு மாநகராட்சியில் பணம் கட்டி அனுமதி வழங்கப்படும். விண்ணப்பங்களை ஒருவாரத்திற்கு முன்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் தனபால் கூறுகையில், ‘விளம்பர பிளக்ஸ் வைப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என்கின்றனர். போலீசாரிடம் விண்ணப்பித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை, கொலை, கொள்ளை, ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என போலீசார் சென்று விட்டால் ஒரு வாரம் அங்கேயே பென்டிங்காகி விடுகிறது. அதற்குள் நாங்கள் நடத்த நினைத்த விழாவே முடிந்து விடும். பின்பு எப்படி விண்ணப்பிப்பது’ என்றார்.

Related Stories: