கொடைக்கானல் சாலைகளில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு பொதுமக்கள் அவதி நடவடிக்கை எடுக்கப்படுமா?

கொடைக்கானல், பிப். 22: கொடைக்கானல் சாலைகளில் ஆக்கிரமிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொடைக்கானல் நகராட்சியில் 24வது வார்டுகள் உள்ளன. இங்குள்ள முக்கிய சாலைகளை அவ்வப்போது தனியார் சிலர் ஆக்கிரமித்து மாணவ, மாணவியர், வியாபாரிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். எம்எம் தெரு, ஆனந்தகிரி 4 மற்றும் 5வது தெரு, நாயுடுபுரம், சண்முகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஒர்க்ஷாப் கடைகள் உள்ளன. இவர்கள் பழுதான வாகனங்களை சாலைகளின் நடுவே நிறுத்தி போக்குவரத்திற்கும், பாதசாரிகளுக்கும் கடும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோல் காமராஜர் சாலையில் மணல், செங்கல் கடைகள் தங்களது விற்பனை பொருட்களை சாலையில் வைத்து இடையூறு அளிக்கும் வகையில் வியாபாரம் செய்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே நகராட்சி நிர்வாகம் சாலையை ஆக்கிரமிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: