×

2 நாட்களுக்கு மின்சார ரயில் சேவை ரத்து

சென்னை, பிப். 22: பராமரிப்பு பணி காரணமாக இன்று மற்றும் 25ம் தேதி மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை இயக்கப்படும் மின்சார ரயில், மூர்மார்க்கெட்டில் இருந்து 22 மற்றும் 25ம் தேதி பிற்பகல் 12.15 மணிக்கு ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட் வரை இயக்கப்படும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டியில் இருந்து 22 மற்றும் 25ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு ரத்து செய்யப்படுகிறது.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...