×

கால்நடை உதவியாளர் பணி நேர்காணல் திடீர் ரத்து

திருவள்ளூர், பிப் 22: தமிழக அரசின் கால்நடை பரமாரிப்புத் துறையில் காலியாகவுள்ள 1,573 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு, மாவட்டங்கள் வாரியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 34 காலிப் பணியிடங்களுக்கு, மொத்தம் 5,475 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு, கடந்த 3 நாட்களுக்கு முன் நேர்காணல் கடிதம்  கிடைத்தது. இந்நிலையில், இன்று (22ம் தேதி) தொடங்கி 25ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. திருவள்ளூர் மாவட்டத்துக்கான நேர்காணல், மாவட்ட கால்நடைத்துறை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திடீரென நேற்று காலை, நேர்காணல் அறிவிக்கப்பட்ட கால்நடை அரசு தலைமை மருத்துவமனையின் நுழைவு வாயிலில், ‘’தற்காலிகமாக நேர்காணல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. எனவே, யாரும் நேர்காணலுக்கு வரவேண்டாம்’’என பேனர் வைத்துள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு 38 கால்நடை உதவியாளர் பதவிகளுக்கு 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு நேர்காணல் நடத்தி ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் 34 பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெற்று, திடீரென நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...