×

உயர் நீதிமன்ற உத்தரவு எதிரொலி சாலையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பேனர்கள் அகற்றம்

ஊத்துக்கோட்டை, பிப். 22: சாலை, பொது இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்க உயர் நிதிமன்றம் தடை விதித்ததின் பேரில் ஊத்துக்கோட்டையில் அனைத்து பேனர்களையும் பேரூராட்சி அதிகாரிகள் அகற்றினர். சாலை ஓரங்களிலும், பொது இடங்களிலும் பொதுமக்களுக்கு இடையூராக வைக்கப்பட்டுள்ள பேனர்களால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூராக இருப்பதாகவும் அதை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அனுமதி பெறாத பேனர்களை அகற்ற வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் நேற்று காலை ஊத்துக்கோட்டையில், நேரு சாலை, பஜார், பஸ் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலை, நான்கு முனை சந்திப்பில் அண்ணாசிலை பகுதி, நாகலாபுரம் சாலை, திருவள்ளூர் சாலை, சத்தியவேடு சாலை போன்ற பகுதிகளில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்களை அகற்றினர். மேலும் இனிமேல் அனுமதி பெறாமல் பேனர் வைக்ககூடாது, அப்படி பேனர் வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் தெரிவித்தார்.

Tags : High Court ,Echo Road ,
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...