இந்திய மருத்துவமுறை ஆராய்ச்சி மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

வேலூர், பிப்.22:வேலூர் விஐடி- கோவை ஆர்ய வைத்திய மருந்து ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் விஐடியில் இந்திய மருத்துவமுறை ஆராய்ச்சி மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.வேலூர் விஐடி பல்கலைக்கழகம் - கோவை ஆர்ய வைத்திய மருந்து ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து விஐடியில் சித்தா ஆயுர் வேதா உள்ளிட்ட இந்திய மருத்துவமுறை ஆராய்ச்சி மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்திடப்பட்டது. இதில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், ஆர்ய வைத்தியமருந்து ஆராய்ச்சி அறக்கட்டளை மேலாண்மை இயக்குநர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.சித்தா ஆயுர்வேதா உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைக்கு தேவையான மருந்துகள் கண்டுபிடிப்பு சம்மந்தமான ஆராய்ச்சி மையம் ஒன்று விஐடி உயிரி அறிவியல் தொழில் நுட்பபள்ளி சார்பில் அமைக்கப்பட உள்ளது. இந்த சித்தா ஆயுர்வேதா ஆராய்ச்சி மையம் நாட்டில் மிகப்பெரிய ஆராய்ச்சி மையமாக விளங்கும்.

இங்கு உயிரியல், நோய் எதிர்ப்புசக்தி, வேதியியல் தொடர்புடன் கூடிய சித்தா ஆயுர்வேதா சிகிச்சை சம்மந்தமான ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளபட உள்ளன. மேலும் ஆயுர்வேதா சித்தா மற்றும் நவீன உயிரியியல் பாராமெடிக்கல் பிரிவில் டிப்ளமோ மற்றும் பட்டபடிப்பு முதுகலை மற்றும் பிஎச்டி பட்டபடிப்புகள் தொடங்கப்பட உள்ளன.

Related Stories: