×

நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும்

அருமனை, பிப். 22: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று பரக்குன்றில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி பேசினார்.மேல்புறம் ஒன்றிய திமுக சார்பில் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மேல்புறம் அருகே பரக்குன்று சந்திப்பில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மேல்புறம் ஒன்றிய செயலாளர் சிற்றார் ரவிச்சந்திரன் தலைைம வகித்தார். ஊராட்சி செயலாளர்கள் ஆல்வின், அனில்குமார், ஜெயசேகர், பேரூர் செயலாளர்கள் தேவதாஸ், போஸ், மைக்கேல் குமார், ஒன்றிய துணை செயலாளர் ஜெஸ்டின்ராஜ், பொருளாளர் ஜார்ஜ் ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், ஏழைகளுக்கு நல உதவிகளை திண்டுக்கல் லியோனி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: சுயமரியாதை உணர்வு, பகுத்தறிவு ஆகியவற்றை கொண்ட தொண்டர்களால் நிரம்பிய இயக்கம்தான் திமுக. மக்களை சந்திக்க திமுக ஒருபோதும் தயங்கியது இல்லை. மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் கிராம சபை கூட்டம் மக்கள் மத்தியில் புது எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல்வர் பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், பொங்கல் பரிசாக ₹1000, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ₹2 ஆயிரம் வழங்கி மக்களை ஏமாற்றி வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார். இவர்களை எல்லாம் பாதுகாப்பது பிரதமர் மோடி தான். அவர் கடந்த தேர்தல் காலத்தில் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லைமத்திய, மாநில அரசுகளை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைவது மட்டுமின்றி டெப்பாசிட் கூட வாங்காது. இவ்வாறு லியோனி பேசினார்.கூட்டத்தில், மேல்புறம் ஒன்றிய அவை தலைவர் மாஹீன் அபுபக்கர் வரவேற்றார். மாநில மீனவரணி செயலாளர் இரா. பெர்னார்டு, முன்னாள் அமைச்சர் கு. லாரன்ஸ், முன்னாள் எம்பி ஹெலன்டேவிட்சன், மாவட்ட துணைத் தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், மாவட்ட அவைத்தலைவர் பப்புசன், முன்னாள் எம்எல்ஏக்கள் ரெஜினால்டு, டாக்டர் புஷ்பலீலா ஆல்பன், மாநில சட்டத்துறை செயலாளர் தினேஷ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் டாக்டர் கிளாடிஸ் லில்லி,  பேச்சாளர் சிலம்பை டென்னிசன், தக்கலை நகர செயலாளர் மணி, மாவட்ட பிரநிதிதி எஸ்.கே. மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய பிரதிநிதி அருள்சங்கர் நன்றி கூறினார்.


Tags : DMK ,alliance ,Puducherry ,election ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து...