×

ரயில் நிலையங்கள் மேம்பாடு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்

நாகர்கோவில், பிப். 22: குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:நாகர்கோவில் டவுன் மற்றும் ஜங்ஷன் ரயில் நிலையங்கள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் 5 எம்எல்ஏக்கள் நேரடியாக சென்று மேலாளரை சந்தித்து மனுக்கள் அளித்தோம். பிறகு நான் பலமுறை நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் கோரிக்கைகளை வலியுறுத்தி மேலாளரிடமும், திருவனந்தபுரம் ேகாட்ட பொதுமேலாளரிடமும் வலியுறுத்தினேன்.நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக உடனே பிளாட்பாரம் வசதி செய்யப்பட வேண்டும். கழிப்பறை, குடிநீர், மின்சார வசதிகள் செய்து கொடுத்தல் வேண்டும். டைம் கீப்பர் ஒருவரை நியமிப்பதுடன் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கழிப்பிட வசதிகள் செய்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். இது தொடர்பான எந்தவித மேல் நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் ரயில்வே துறை தலைவர் மற்றும் ரயில்வே அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதினேன். அதற்கும் நடவடிக்கை எடுக்கிறோம் என்று பதில் மட்டும் வந்ததே, தவிர எந்த முன்ேனற்றமும் இல்லை.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வள்ளிக்கண்ணு என்பவர் எர்ணாகுளம் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 3 மாத காலத்திற்குள் பணிகளை முடித்துக்கொடுக்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே ரயில்வே துறை நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று திமுக சார்பிலும், தொகுதி மக்கள் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன். ேஇவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி