பிலிகுலாவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு 2 ராஜ நாகம் வருகை

சென்னை: மங்களூரு அருகே உள்ள பிலிகுலா வன உயிரியல் பூங்காவில் இருந்து  சென்னை வண்டலூர் வன உயிரியல் பூங்காவுக்கு 2 ராஜ நாகம் உள்ளிட்ட  பாம்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து பிலிகுலா வன உயிரியல்  பூங்கா நிர்வாக அதிகாரி ஜெயபிரகாஷ் பண்டாரி வெளியிட்டுள்ள அறிக்கை: மங்களூரு உயிரியல் பூங்காவில் இருந்த 2 ராஜநாகம், ஒரு மலைப்பாம்பு  மற்றும் மற்றொரு பாம்பு சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வண்டலூர் பூங்காவில் இருந்து 10 ஜோடி   வண்ண கொக்குகள், 2 காட்டெருமை உள்ளிட்டைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: